மேஷம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாளாக இருக்கும்.
சகோதர வழி சச்சரவுகள் அகலும். வரவும் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அண்டை அயலாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கி சுபிட்சம் உண்டாகும். உற்சாகம் பிறக்கும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். அன்பு பாசம் காட்டுவது ரொம்ப நல்லது.
கடன் பிரச்சனைகளை சாதுரியமாக கையாளுவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இறைவழி பாட்டுடன் செய்யுங்கள். குடும்பத்தாரிடம் பேசும் பொழுது கோபமில்லாமல் பேசுங்கள்.மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள்.காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் சுகமாக நாளாக இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டுசிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.