விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும்.
மாற்று மருத்துவத்தால் உடல்நிலை சீராகும். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்திற்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாலைநேரத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முக்கியமான செய்திகள் உங்கள் இல்லம்தேடி வரக்கூடும். பாக்கிகளை வசூல் செய்வதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
தேவையில்லாத இடமாற்றங்கள் ஏற்படலாம். பயணங்கள் அலைச்சலைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். கடல் தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.