துலாம் ராசி அன்பர்களே..!
இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும்.
புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை உண்டாகும். இனம்புரியாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். உற்சாகத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்ல வேண்டியதிருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.