Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! மகிழ்ச்சி கூடும்…! கவனம் தேவை…!!

மேஷம் ராசி அன்பர்களே…! புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படும்.

ஊர் கோயில்களில் முன்னின்று விழாக்களை நடத்த ஏற்பாடு கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை இருக்கும். மகிழ்ச்சியும் பெருகும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக இருக்கும். சுபகாரிய பேச்சுகள் தடையின்றி நடக்கும். எடுத்த முயற்சிகள் நல்லபடியாக நடக்கும்.கணவன் மனைவி இடையே சின்னதாக கருத்து வேறுபாடு வரும். மனதில் வருத்தங்கள் வேண்டாம். வாக்கு வாதங்களும் வேண்டாம். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

அக்கம்பக்கத்தினர் என் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். புதிய தொழில் செய்யக் கூடியவர்கள் நிதானமான போக்கையே அணுக வேண்டி இருக்கும்.தீப ஒளி திருநாள் என்பதால் மனதில் இருக்கும் கஷ்டங்களை தூக்கிப்போட்டுவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். ஆடை ஆபரணம் சேர்க்கை இன்று இருக்கும். மகிழ்ச்சியாக இந்த பண்டிகையை நீங்கள் கொண்டாடுவீர்கள்.மாணவக் கண்மணிகள் பட்டாசு வெடிக்கும் போது ரொம்ப கவனமாக வேடிக்கை வேண்டும்.

சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆரஞ்சு நிறத்தை முடிந்தால் அணிய வேண்டும்.இல்லையேல் மனதிற்குப் பிடித்த புத்தாடை அணிய வேண்டும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் மூன்று. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.

Categories

Tech |