தனுசு ராசி அன்பர்களே..!
திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள்.
தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச் சேருவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பிற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பிள்ளைகள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். மனதில் நிம்மதி உண்டாகும். அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். தீர ஆலோசித்து எந்தவொரு செயலிலும் ஈடுபடுங்கள். இன்று பூர்வீக சொத்து வழியில் லாபம் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சிந்தனைதிறன் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர்நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நல்லபடியாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் அடர்நீல நிறம்.