Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனை தீரும்…! லாபம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! தேவையான அளவில் பணம் இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

திடீரென ஏற்படும் செலவை கூட சமாளித்து விடுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்வார்கள். குடும்பத்தாரின் அன்பில் திகைத்து காணப்படுவீர்கள். ஒரு சில நபருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும். அலுவலக வேலையாக செல்ல வேண்டி இருக்கும்.தீபாவளி திருநாள் என்று கூட பார்க்காமல் அலுவலக வேலையை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அலட்டிக்கொள்ளாமல் அதிகாரிகளின் வேலையை பார்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாபம் வந்து சேரும்.

எதிர்பார்த்தபடி அனைத்து விஷயங்களும் இன்று நடக்கும். போட்டி பொறாமைகள் விலகிச் செல்லும். எதிர்ப்புகளும் இன்று விலகிச் செல்லும். குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆடை ஆபரணம் சேர்க்கை இருக்கும்.தங்கு தடை இன்றி அனைத்து விஷயங்களும் வந்துசேரும். மகிழ்ச்சியான சூழல் அமையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மகிழ்ச்சிகரமான செய்திகள் இருக்கும்.இந்த தீபாவளித் திருநாளில் மனதை ஒருநிலைப்படுத்தி மகிழ்ச்சியாக இருங்கள். எந்த ஒரு தீய சிந்தனையும் வேண்டாம்.

மாணவக் கண்மணிகள் வெடி வெடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவலைகளை மறந்து மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக செய்ய வேண்டியது சூரிய நமஸ்கார வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தால்  வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். இல்லையேல் இருக்கும் புத்தாடை மனதார அணிந்து கொண்டாடுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் நீல நிறம்.

Categories

Tech |