மிதுனம் ராசி அன்பர்களே…! நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
சில பணி காரணமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். ஆபரணம் சேர்க்கையும் இருக்கும். அவசரம் காரணமாக அலுவலகத்தில் பணிகள் இருக்கும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வந்து சேரும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.நண்பர்கள் மூலம் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது ரொம்ப ரொம்ப எச்சரிக்கை வேண்டும்.வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டியிருக்கும். நல்ல நன்மைகளும் இருக்கும்.
இறைவழிபாடு மூலம் எல்லா காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். சாதகமான சூழலை நிலவும். உடன்பிறந்தவர் களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். தாய் தந்தையாரின் உடல் நிலையில் கவனம் வேண்டும். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் போதுமானது. தீப ஒளி திருநாள் அன்று மன கவலைகளை மறந்து விட்டு சந்தோஷமாக இருப்போம். மாணவக் கண்மணிகள் பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கையுடன் எதையும் செய்ய வேண்டும்.முடிந்தால் இன்று பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இருக்கும் புத்தாடை மனதார அனுபவித்து போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.