Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நிலுவைத் தொகை வசூலாகும்..! நிதானம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள்.

அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக்கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பிரச்சனைகளும் சரியாகும். முக்கிய செயல்களில் கவனமாக ஈடுபடவேண்டும். யாரை நம்பியும் இன்று பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். செய்யும் செயலில் நிதானம் வேண்டும். எதிலும் அலட்சியம் காட்டாதீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். திடீர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பயணங்களில் செலவுகள் அதிகரிக்கும். அலைச்சலும் உண்டாகும். பெண்கள் வீண் பேச்சுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். இன்று சிந்தித்து செயல்பட வேண்டும். திட்டமிட்டு காரியங்களை எதிர்கொள்ள வேண்டும். பேச்சில் பொறுமையை பேணவேண்டும். பொறுமையை மேற்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |