Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நிதானம் அவசியம்..! நினைத்தது நிறைவேறும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம்.

இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். சிந்தனைத்திறனை அதிகப்படுத்தி கொள்வீர்கள். சிலர் வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வேலையாட்களிடம் கவனமாக பேசுங்கள். சக பணியாளர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள்.

நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத சூழல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் மேலோங்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |