தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும். சரியான முறையில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் வந்துசேரும். புதிய ஆர்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். மனதில் தைரியம் பிறக்கும்.
குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நண்பர்களிடமும் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். வாகனயோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லவும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.