Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! லாபம் கிடைக்கும்..! பொருள்கள் சேரும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! யோசித்து பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும்.

காரியங்களில் நல்ல அனுகூலம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். நிம்மதி ஏற்படும். மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத்துணை வழி நண்பர்களால் உறவு ஏற்படும். அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.சின்ன பிரச்சினையைக் கூட சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தாரிடம் அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள். வாக்கு வாதங்கள் வேண்டாம்.

தொலைந்து போன பொருட்கள் கிடைக்க கூடும். தொலைந்து போன பொருட்களை சாதுரியமாக கண்டுபிடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். மாணவக் கண்மணிகள் பட்டாசு வெடிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் எதையும் செய்யுங்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்வோம். இன்று நீங்கள் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இல்லையேல் இருக்கின்ற புத்தாடை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |