இன்றைய நாள் (26-08-2020) 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
மேஷம்
நீங்கள் இன்று மன கவலையுடன் இருப்பீர்கள். வெகுவாக முடியும் காரியங்கள் கூட சிறிது தாமதம் ஏற்படலாம். இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதனால் தொழிலில் வீண் வாக்குவாதம் உண்டாகலாம். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
ரிஷபம்
எந்த செயல் செய்தாலும் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணக் கவலை நீங்கும். வீட்டில் அனைவருடனும் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். நல்ல செய்திகள் உறவினர் மூலம் வரும்.
மிதுனம்
இந்த ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் உற்சாகத்துடன் செய்வீர். தொழில் ரீதியில் வெளியூர் செல்ல வாய்ப்பு கூடும். தொழில் வளர்ச்சி அடைய பாடுபடுவது நல்ல பலன் தரும். திருமணத் தடை அகலும். கடவுளை வணங்குவது மன நிம்மதியை கொடுக்கும்.
கடகம்
குடும்பத்தினருடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனங்களால் வீண் செலவு வரக்கூடும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வேலை சுமை குறையும் உடன் இருப்பவர்களால்.
சிம்மம்
எந்த முயற்சி எடுத்தாலும் சில தடை உண்டாகும். தொழிலில் செலவு ஏற்படக்கூடும். ஒற்றுமை குறையலாம் உடன்பிறப்புகள் இடம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்யோக ரீதியில் சிறிது அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
கன்னி
இன்றைக்கு தொழிலில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவீர்கள். புதிதாய் பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். உதவிக்கரம் நீட்டுவர் உடன்பிறந்தவர். தடையாக இருந்த திருமணம் கைகூடி வரலாம். வராத கடன் நம் கைக்கு வரக்கூடும்.
துலாம்
உங்கள் ராசிக்கு ஏதேனும் தொடங்க நினைத்தால் சில இடையூறு வரும். வீட்டில் இருப்பவர்களிடம் மனவருத்தம் இருக்கலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர். தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும் பிரச்சனைகள் அகலும்.
விருச்சிகம்
வீட்டில் இருப்பவர்களிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள் மனக்கசப்புகள் நீங்கி. குழந்தைகள் ஆசை நிறைவேறும். உத்தியோகத்தில் நினைத்த பலன் கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவி கிடைக்கும்.
தனுசு
எந்த செயலிலும் ஆர்வமின்றி இருப்பீர். உடல்நிலை ரீதியாக செலவு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அகலும். முன்னேற்றம் உண்டாகும் உத்தியோகத்தில் வியாபாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம். உற்றார் உறவினர் உதவி கிடைக்கும். கடன் தொல்லை சிறிது நீங்கும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு பண வரவு அதிகரிக்கும். வீட்டில் வீண் செலவு ஏற்படும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். வேலை ரீதியில் இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகம் சம்பந்தமான திட்டம் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை சேர்க்க நினைப்பீர்கள்.
கும்பம்
தொழிலில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திருமண நிகழ்ச்சிகளில் சாதகமாக பலன் அமையும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு அகலும். சொத்துக்களை வாங்க முயற்சி எடுப்பீர்கள். தொழிலில் புதிதாய் மாற்றம் ஏற்படும்.
மீனம்
அக்கம்பக்கத்தினரிடம் வேறுபாடு ஏற்படும். உடல்நிலை சீராக சற்று கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் நல்ல மனிதர்களின் உதவி கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் பொருளாதார நிலையில்.