Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பணிச்சுமை இருக்கும்…! லாபம் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! சிலருக்கு வேலை காரணமாக அதிகப்படியாக பணிச்சுமை இருக்கும்.

அவசரம் காரணமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாராத காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய பணியை கண்டு மற்றவர்கள் பாராட்டக் கூடும். உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இல்லாததால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தாரிடம் வாக்குவாதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். வீட்டில் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். சலவை கூடுமானவரை கட்டுப்படுத்த வேண்டும்.

மற்றவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். பணவிஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இளைஞர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நண்பரிடம் பேசும்பொழுது எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது.

வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு வீட்டில் கடுமையான பணிச்சுமை இருக்கும்.மாணவக் கண்மணிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் வெடி வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தீப ஒளி திருநாளில் அனைத்து விதமான கவலை மறந்து விட்டு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.இன்று முடிந்தால் நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இல்லையெனில் இருக்கும் புத்தாடையை மகிழ்ச்சியாக உடுத்தி வாருங்கள். சூரிய பகவானை வழிபட்டு எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் மூன்று. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்.

Categories

Tech |