ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் எளிதாக இருக்கும்.
கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து மனதில் ஒருவித நிம்மதி பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். குடும்பம் குதூகலமாக இருக்கும். உறவினர்கள் இல்லத்தை தேடி வருவார்கள். நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். வருமானம் முன்னேறி வருவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகத்தில் இதுவரை இருந்த வந்த இன்னல்கள் விலகி சுபிட்சம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எண்ணிய எண்ணம் ஈடேறும். உத்தியோகத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகும். கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு இந்த நாள் பொன்னான நாளாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணங்களால் விருத்தியடையும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களுடைய அதிர்ஷ்டமான நிற ஆடை கருமை நிறம். உங்கள் எண்ணம் எல்லாம் ஈடேறும்.