Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வழி பிறக்கும்…! தைரியம் கூடும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமையும்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி இரு மடங்காகும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். கடன் சுமைகளை குறைக்க புதிய புதிய வழிகளை தேர்ந்தெடுப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் வைத்ததே சட்டம். நிர்வாகிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனதில் சந்தோஷம் பிறக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அருமையாக செயல்படுவார்கள்.திட்டமிட்டு செயல்பட்டால் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஊக்கம் உண்டாகும். உங்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நிறம் பச்சை நிறம்.

Categories

Tech |