ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் நன்மைகள் காண வேண்டிய நாளாக இருக்கும்.
குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு வழி சலுகைகள் எதிர்பார்த்த படி கிடைக்கும். இன்று வேலை பளு கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலமாக மணமகழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகி செல்லும. பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகிவிடும். தேவையான பண உதவி கிட்டும். சுவாசக் கோளாறு கொஞ்சம் ஏற்படும். ஜலதோஷ பிரச்சனை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். தாய் வீட்டு வருகை இருக்கும்.
காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.