இன்றைய பஞ்சாங்கம்
27-12-2022, மார்கழி 12, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.53 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.27 வரை பின்பு சதயம்.
சித்தயோகம் பகல் 02.27 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் – 27.12.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
சிம்மம்
உங்களின் ராசிக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை தீரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.
தனுசு
உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத செலவுகளால் மனநிம்மதி குறையும். உத்தியோக ரீதியான பயணங்களினால் அலைச்சலும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பணவரவில் இருந்த இடையூறுகள் விலகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.