துலாம் ராசி அன்பர்களே,
இன்று அவசரமாக சில பணிகளை செய்ய வேண்டியது இருக்கும்.
சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடிய முயற்சி தேவைப்படும். சேமித்து வைத்திருந்த பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் பொறுமையாக சென்று வாருங்கள். துணிச்சலான சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மைகள் பெறுவீர்கள். மனதில் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத வகையில் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெண்கள் இன்று தேவை இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். யோசித்து செயல்பட வேண்டும். குடும்பத்தினரிடம் பேசி முடிவெடுப்பது நல்லது. காதலில் குழப்பம் ஏற்படும். பொறுமை அவசியம். மாணவர்களுக்கு பேச்சாற்றல் வெளிப்படும் நாளாக இருக்கும். கல்விக்காக நேரத்தினை ஒதுக்க வேண்டும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் பச்சை நிறம்.