மகரம் ராசி அன்பர்களே..!
இன்று இறைவனின் வழிபாட்டால் மகத்துவம் உண்டாகும்.
கலகலப்பான சூழல் ஏற்படும். வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படும். வட்டாரத்தொடர்பு விரிவடையும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மனதில் தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தினரை புரிந்து நடக்க வேண்டும். மாணவர்கள் யோசித்து செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.