Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! தனவரவு சீராக இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். துணிச்சல் மிக்க வேலைகளையும் நீங்கள் செய்வீர்கள். நினைத்த காரியமும் வெற்றியை கொடுக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்.

உடல் ஆரோக்யத்தில் கவனம் கொள்ள வேண்டும். நல்ல உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காரத்தை உணவில் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் வெண்பூசணி சாறு எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் மனஅமைதி பெறும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். நினைத்த வாழ்க்கை அமைந்துவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். மாணவர்கள் எதிலும் துணிவுடன் ஈடுபடுவார்கள். கல்விக்காக எந்த வொரு விஷயத்தையும் செய்வார்கள். கடின உழைப்புக்கான பலனை ஏற்படுத்தக்கூடும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து, எந்தவொரு பணியையும் செய்து வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பிரவுன் நிறம்.

Categories

Tech |