இன்றைய பஞ்சாங்கம்
16-11-2020, கார்த்திகை 01, திங்கட்கிழமை, பிரதமை திதி காலை 07.07 வரை பின்பு வளர்பிறை துதியை பின்இரவு 03.57 வரை பின்பு திரிதியை.
அனுஷம் நட்சத்திரம் பகல் 02.36 வரை பின்பு கேட்டை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
சந்திர தரிசனம்.
கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 16.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதமாகும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் அதிகம் வேண்டும்.வெளியில் வாகனங்களில் சென்றால் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். பேச்சில் நிதானம் இருப்பது நல்லதைக் கொடுக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் சுப செலவுகள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில் ரீதியில் எடுக்கும் முயற்சி அனைத்துக்கும் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை தீரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பலமும் வலிமையும் இருக்கும். கடினமான காரியத்தை எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் திறமைக்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வீட்டில் அமைதி நிலவும்.குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் திடீர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். செலவுகள் உண்டாகும். சுபகாரியங்களில் இடையூறு இருக்கும்.தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழிலில் கவனம் வேண்டும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். புதிய தொழில் தொடங்கும் காரியம் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு.எதிலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட்டால் நல்லது நடக்கும். தொழிலில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பிள்ளைகளிடம் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக வளர்ச்சிக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாய்ப்புகள் உருவாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். வராத பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் செலவுகள் கூடும். உத்தியோகத்தில் மந்தநிலை இருக்கும்.வெளியூர் பயணத்தில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். தெய்வ வழிபாடு நல்லதைக் கொடுக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பிள்ளைகளால் சுப செலவு இருக்கும். சிலருக்கு தொழில் விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும். உத்தியோக ரீதியில் புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.உற்றார் உறவினர்களிடம் பகை விலகும் நட்பு கிடைக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நெருங்கியவர்களிடம் இருந்த பிரச்சனைகள் வரும். வீட்டில் நிம்மதி இல்லாத நிலை இருக்கும். விட்டுக் கொடுத்து நடந்தால் மன அமைதி கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மந்த நிலை நீங்கி லாபம் கிடைக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். குழந்தைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும்.உத்யோகத்தில் கூட்டாளியின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பெண்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். வெளி பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த வேறுபாடுகள் நீங்கும். சுப காரியங்களில் இருந்த தடை விலகும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு பணம் உயரும்.