நாளைய பஞ்சாங்கம்
17-11-2020, கார்த்திகை 02, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
கேட்டை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு மூலம்.
மரணயோகம் பகல் 12.21 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
நாளைய ராசிப்பலன் – 17.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் மந்த நிலை ஏற்படும். பண நெருக்கடிகள் கூடும்.பகல் 12.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.புதிய முயற்சிகள் அனைத்தையும் மதியத்திற்கு பின் தொடங்கவும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடல்நிலை சோர்வு சுறுசுறுப்பின்மையும் இருக்கும். ஈடுபாடின்றி எந்த ஒரு வேலையிலும் செய்வீர்கள்.பகல் 12.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் காலதாமதம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு தொழில் செய்பவர்களுக்கு தொழில் உதவி கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கு. தொழில் விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுப பேச்சுவார்த்தை நடக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் நல்ல செய்தி உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறும். தொழிலில் சிலருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சுப காரியங்கள் அனுகூலப் பலனை கொடுக்கும். தொழிலில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். வீட்டில் சிறு சிறு சலசலப்பு இருக்கும். உடன் இருப்பவர் களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தொழிலில் லாபம் உண்டாகும். தொழில் ரீதியில் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் உடன்பிறந்தவர்களின் வழியாக மனக்கஷ்டங்கள் ஏற்படும். பொருட்களால் வீண் விரயம் உண்டாகும். சிக்கன் அத்துடன் இருப்பது நல்லது.வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவேண்டும் சென்றால் வீண் பிரச்சினைகள் தவிர்க்கலாம். தொழிலில் பணிச்சுமை நீங்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பலமும் வலிமையும் அதிகரிக்கும். கடினமான காரியம் கூட எளிதில் முடியும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயலில் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது. வேலைச்சுமை அதிகரிக்கும்.உத்தியோகத்தின் கொடுக்கல் வாங்கல் நல்ல பலனைக் கொடுக்கும். வீட்டில் சுப செலவு உண்டாகும்.உற்றால் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு பண வரவு சீராக இருக்கும். தொழிலில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். சுபகாரியங்கள் உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எடுத்த காரியத்தை முடிப்பதில் சிறு தாமதம் இருக்கும். புத்தக ரீதியில் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். சுப காரியங்களில் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலம் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உத்யோகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தாமதமில்லாமல் கிடைக்கும்.தொழிலில் சக ஊழியர்களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு நல்ல பலனை அடைவீர். உற்றார் உறவினர்களால் ஆதாயம் பெருகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் எடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். நெருங்கியவர்களின் உதவியால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.