Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கவனம் தேவை..! வாக்குறுதி கொடுக்க வேண்டாம்..!!

மேஷம் ராசி அன்பர்களே:
இன்று நீங்கள் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பணம் நெருக்கடிகள் உண்டாகும்.

உடன்பிறப்புகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கேட்ட உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாகனம் மற்றும் வீடுகளை சீர்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

முயற்சிகள் ஓரளவு சாதகபலன் கொடுக்கும். பணவரவில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பெண்கள் சமையல் மேற்கொள்ளும்போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் எந்தவொரு விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், சிறியளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்று நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |