Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நினைத்த விஷயங்கள் நிறைவேறும்..! சொத்துக்கள் அதிகரிக்கும்..!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று சொல்லும் சொற்கள், வெல்லும் சொற்களாக மாறும் நாளாக இருக்கும்.

நீண்ட நினைத்த விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் சரியாகும். புதிய சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் எளிதில் வந்துச்சேரும். சிறிது தடைகள் மற்றும் தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் அலைச்சலை ஏற்படுத்தக்கூடிய அளவில் இருக்கும். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று புத்திசாலித்தனம் வெளிப்படும். நேர்மை எண்ணத்துடன் எதையும் மேற்கொள்வீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். நிதானப் போக்கை வெளிப்படுத்துங்கள். சக மாணவர்களுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள்.

காதலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனா தானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |