Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..! தைரியம் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் மகிழ்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். பயணத்தால் நற்பலன் உண்டாகும்.

தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதைகள் உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். செலவுக்கேற்ற வரவு உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தங்களுடைய பொருட்களை கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். வாகனங்களால் செலவுகள் ஏற்படும்.

புதிய தொழில்களை தொடங்கும் பொழுது கவனம் தேவை. பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். முயற்சிகள் ஓரளவு சாதகப்பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் பொறுமையுடன் நடந்துக் கொள்ளுங்கள். வேலைபளு அதிகமாக இருக்கும். பெண்களுடன் பேசும்பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

பெண்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கிக் குவிப்பீர்கள். மாணவ கண்மணிகளுக்கு இன்றைய நாள் சிரமமில்லாமல் செல்லும். கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |