சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று கேட்டவர்களுக்கெல்லாம் உதவிகள் செய்வீர்கள். தொட்ட காரியங்கள் நிறைவேறும்.
நீங்கள் ஆன்மீகத்தின் மூலம் நல்ல முன்னேற்றகரமான வாய்ப்புகளை பெறமுடியும். தெய்வீகபக்தி கூடும். இதற்காக சிறிய தொகையை செலவிட நேரிடும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உற்பத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். இன்று செழிப்பான சூழல்கள் நிலவும். இல்லத்திலும் சுப செய்திகள் வந்துச்சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும்.
இன்று ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். யாரையும் நம்பி எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தடைகளை தாண்டி இன்று காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கை தேவை. தந்தையிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். சகோதரர்களின் ஒற்றுமை பலப்படும். சகோதரர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள்.
வெளியூர் பயணம் செல்ல வேண்டியதிருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள். சக நண்பர்களிடம் கவனத்துடன் நடந்துக் கொள்ளுங்கள்.
முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.