தனுசு ராசி அன்பர்களே…! உதவிகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர்கள்.
கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். செய்யும் காரியங்களில் நல்ல திறமை மேம்படும். சகோதர வழியில் சகாயம் கிடைக்கும். குழப்பம் நீங்கி சுமூகமான நிலை இருக்கும். கணவன் மனைவி இடையே எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுங்கள். தேவையில்லாத வாக்கு வாதத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். பயணங்களால் சின்னச்சின்ன செலவுகள் ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் செயல்பட்டு காரிய வெற்றி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். திறம்பட எதிலும் ஈடுபடுவீர்கள். விளையாட்டுத்துறையில் வெற்றியும் பெறுவீர்கள்.
காதலில் உள்ளவர்களுக்கு என்று நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது எல்லாம் நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் நீலம் நிறம்.