மீனம் ராசி அன்பர்களே…! தயவுசெய்து வாக்குறுதிகள் மட்டுமே எவருக்கும் கொடுக்க வேண்டாம்.
உத்தியோகத்தில் மாறுபட்ட சூழல் உருவாகி தொந்தரவு கொடுக்கும். தொழிலை இப்போதைக்கு விரிவுபடுத்த வேண்டாம். தேவைக்காக பணம் கடன் வாங்க வேண்டி இருக்கும். முக்கியமான செலவுகளும் இருக்கும். சேமிப்பு பணம் பயன்படும். மனைவி உறுதுணையாக இருப்பார்கள். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். தேவையில்லாத வேலையை இழுத்துப் போட்டு செய்ய வேண்டாம். சரியான நேரத்திற்கு உறங்க முடியாத நிலை இருக்கும். உங்களின் வாழ்க்கை வன்மையால் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு காத்திருக்கு.
மனதில் பட்டதை அப்படியே கூறி விடுவீர்கள். வீண் பழிகளை ஏற்கும் சூழல் அமையும். சிலர் பொறாமை குணத்துடன் நடந்து கொள்வார்கள். காதலில் உள்ளவர்களுக்கு சிரமமில்லாமல் செல்லும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்.