Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(04-09-2020) நாள் எப்படி இருக்கும் ..?இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

04-09-2020, ஆவணி 19, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு ரேவதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

அம்மன் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் –  04.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு சிறிது சோர்வாக இருப்பீர். வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் செலவு செய்யக் கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும் தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்பு. உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல்நலம் சீராக இருக்கும். சுப செய்திகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வெளியூர் செல்வதால் அனுகூலம் பயன் உண்டாக கூடும். தொழிலில் நல்ல வாய்ப்பு வந்து சேரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கக்கூடும். வீட்டில் அமைதியும் ஒற்றுமையும் கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கப்பெறும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். வெளியூர் செல்வதனால் அலைச்சல் பெருகும். வீட்டில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பிரச்சனைகள் குறைய வாய்ப்பு. சிக்கனமாக இருப்பதனால் தேவைகள் பூர்த்தியாகும். கடவுள் நம்பிக்கை மகிழ்ச்சி கொடுக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதனால் செய்யும் செயல்களில் தடை வரலாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முதலீடு செய்யாமல் இருங்கள். தொழிலில் மேலதிகாரிகளிடம் சிறிது பொறுமையாக செல்லுங்கள் அதுவே உத்தமம். எந்த செயல் செய்தாலும் சிறிது கவனமாக செய்யுங்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். எதிரிகளுடைய பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். பெரியவர்களுடைய நட்பு கிடைக்கும். வீட்டில் மனைவியுடன் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். தெய்வ வழிபாடும் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு சுபசெய்திகளால் மனமகிழ்ச்சி கூடும்.ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வமாக இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் கிடைக்கும். புதிய கருவிகளை வாங்குவதில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தேவையில்லாமல் மன உளைச்சல் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் கூடும். தொழிலில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை கூடும். எந்த காரியங்களிலும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். உதியோக ரீதியில் வெளி பயணங்கள் அதிகரிக்கும். தொழிலில் உடன் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய முயற்சிகளை எடுப்பதனால் குடும்பத்தினரிடம் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருவதனால் இனிய செயல் நடைபெறும். வரவேண்டிய பழைய பாக்கிகள் கைக்கு வரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களில் தாமதம் உண்டாகக் கூடும். வாகன பராமரிப்பிற்காக செலவுகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கூடும். பெரியவர்களின் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு மனம் அமைதி காணும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சாதகமாக பலன்கள் கிடைக்கும்.

 

Categories

Tech |