கும்பம் ராசி அன்பர்களே…! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும்.
சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே இருந்த மனகசப்பு மாறும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தயவு செய்து தள்ளி வைத்து விடுங்கள். சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். தாய் தந்தையருக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தேவைக்காக கடன் வாங்க நேரிடும். நெஞ்செரிச்சல் ஏற்படும்.
காதலில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல நாளாகவே அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பெண் கணிதம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் பிரவுன் நிறம்.