நாளைய பஞ்சாங்கம்
22-11-2020, கார்த்திகை 07, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 10.51 வரை பின்பு வளர்பிறை நவமி.
அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு சதயம்.
மரணயோகம் பகல் 11.09 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
நாளைய ராசிப்பலன் – 22.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடன்பிறந்தவர்கள் மூலமாக நல்ல செய்திகள் வரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். சுப காரியங்களில் தாமதம் உண்டாகும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பணிச்சுமை நீங்கும். மன நிம்மதி இருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை இருக்கும். உத்தியோகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருக்க வேண்டும்.முகம் தெரியாதவர்கள் இடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது. எதிலும் கவனம் வேண்டும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு இல்லம் தேடி நல்ல செய்தி வரும். குழந்தைகளால் சுப செலவுகள் இருக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தாமதமாகவே கிடைக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்கும் ஆர்வம் கூடும். கடன் தொல்லை நீங்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். சிக்கனமாக இருந்தால் செலவுகளை குறைக்க நேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து சுப செய்திகள் வந்து சேரும்.
துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் வீண் செலவு இருக்கும். குழந்தைகளால் சிறு சிறு மன கஷ்டம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆன்மீக வழிபாடு வெற்றியை கொடுக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரும். வீட்டில் வீண் செலவுகளால் பணம் நெருக்கடி இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி உண்டாகும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும் அதுவே நல்லது. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் புதிய மாற்றங்களை கொடுக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு புது நம்பிக்கையும் தெம்பும் இருக்கும். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய சொத்து வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய கூட்டாளி இணைவார்கள்.
மகரம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீண் செலவு இருக்கும்.உற்றார் உறவினர்களால் வீட்டில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த செயல் செய்தாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவும் உண்டாகும். கடன் தொல்லை தீரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கைக்கு வரும். திருமண சுப காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு இருக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று மந்தம் சோர்வு இருக்கும். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் தேவையில்லாத வீண் செலவு இருக்கும். பொருளாதார நெருக்கடியில் கடனை வாங்குவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபத்தை அடைய அனுசரித்து செல்லுங்கள் உடனிருப்பவர்களே அதுவே நல்லது.