Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு… “அன்பு பெறுவீர்”… வியாபாரம் கூடும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று உங்களை அவமதித்தவர் அன்பு பாராட்டக் கூடும். செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். ஆர்வம் மிகுந்து காணப்படும். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். திருப்திகர அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள். பயணங்களில் பொழுதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் ரொம்ப எச்சரிக்கை வேணும். மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கல்விக்கான உபகரணங்கள் வாங்க கூடிய சூழலும் இருக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்கும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாடிக்கையாளரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

அக்கம்பக்கத்தினரின்  ஆதரவும் உங்களுக்கு மனப் பூர்வமாக கிடைக்கும். அது மட்டுமில்லை  இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். இறைவனுக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று வெளியிடங்களுக்குச் செல்லும்போது மட்டும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். அது போலவே கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. பேச்சில் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இன்று சுமுகமாக இருக்கும். அதுபோலவே யாரிடமும் இன்று கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். மற்றவரிடம் இருந்து பணம் பெரும் பொழுதும் எண்ணிப் பார்த்து வாங்குங்கள். அதேபோல நீங்கள் கொடுக்கும் பொழுதும் எண்ணிப் பார்த்துக் கொடுங்கள். இன்று காதலர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லை இன்று சிவருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை.

Categories

Tech |