தனுசு ராசி அன்பர்களே…! யோகமான நாளாக இருக்கும்.
உங்களின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கைகூடிவரும். பகையாக இருந்தவர்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். மதிப்பும் மரியாதையும் இருக்கும். பெண்களால் முன்னேற்றமான சூழல் இருக்கும். அலுவலகத்தில் உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்பு வந்து சேரும். இறையருள் வேண்டும். குடும்ப தேவையை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் இருக்கும். மாணவக் கண்மணிகள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு கவனமாக படிக்கவேண்டும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.