மகரம் ராசி அன்பர்களே…! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்தவீர்கள். உறவினர் பகை மாறும். பிறருக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கற்பனை திறன் அதிகரிக்கும். கல்யாணமான தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். எதிர்பார்த்த கடன் கிடைத்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தை திட்டமிட்டு செய்வீர்கள். போட்டிகள் தலைதூக்கும். சாமர்த்தியம் வெளிப்படும். கலகலப்புக்கு குறை இருக்காது. குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை சிறப்பான நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.