விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகமான பலன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் முன்னேற்றத்தை பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.