கும்பம் ராசி அன்பர்களே…! நண்பர்களிடம் சில விஷயத்தை பற்றி பேசுவீர்கள்.
உரையாடல் பொழுது குழப்பம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பண பரிவர்த்தனை சுமாராக தான் இருக்கும். அதிகம் பயன் தராத பொருளை நிர்பந்தத்தின் பெயரில் வாங்க வேண்டாம். மனைவியிடம் அன்பாக பேசுங்கள் கோபத்தை விட்டு விடுங்கள். அலுவலக வேலை அதிகமாக இருக்கும். பொறுப்புகளை சுமப்பார்கள்.இயந்திரம் ஆயுதங்களை கையாளுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறைவனின் அருள் இருக்கும்.
மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடினமாக உழைக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுமையாக இருந்து காரியத்தை செய்ய வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.