Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (27-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

27-11-2020, கார்த்திகை 12, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.47 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.

அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.22 வரை பின்பு பரணி.

அமிர்தயோகம் இரவு 12.22 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பிரதோஷ விரதம்.

சிவ வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

இன்றைய ராசிப்பலன் –  27.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். தொழிலில் பதவி உயர்வு உண்டாகும். பணவரவு இருக்கும். சுப காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் புதிய ஒப்பந்தம் உண்டாகும். உடல்நிலையில் பிரச்சினை தீரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். வீட்டில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். அனுபவம் உள்ளவர்களின் கருத்துகள் உத்தியோகத்திற்கு உதவும்.தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கடன்கள் நீங்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீடு தேடி நல்ல செய்தி வரும். வீட்டில் ஒற்றுமை உண்டாகும்.புதிய வளர்ச்சிக்கு எடுக்கும் முயற்சி அனைத்தும் நல்ல பலனை கொடுக்கும்.குடும்பத்தில் பெண்கள் பொறுப்பு அறிந்து இருப்பார்கள். பொன்னும் பொருளும் சேரும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் இருக்கும்.உதியோக வளர்ச்சிக்கு அரசு வழியில் உதவிகள் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருக்கும். தொழிலில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். பெரியவர்களின் அறிமுகத்தால் அனுகூல பலன் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன உளைச்சல் உண்டாகும். வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க காலதாமதம் ஆகும். உடல்நிலையில் கவனம் வேண்டும்.எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும் வெற்றி கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும் சூழல் உண்டாகும். தேவையில்லாத வீண் செலவு செய்யக் கூடும். வீட்டில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்கவேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். வெளி பயணங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்

உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் உண்டாகும். வெளி பயணங்களாலும் அனுகூலப் பலன் கிடைக்கும். பழைய பாக்கிகள் கைக்கு வரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தொழில் தொடங்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக் கூடும்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் இருக்கும். உடல்நிலையில் ஆரோக்கிய பாதிப்பு இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்.விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் தீரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வரவைக் காட்டிலும் செலவு இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் உண்டு. பிரச்சனைகள் குறையும்.தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று நல்ல பலனை அடைவார்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் துணிச்சலுடன் செய்து வெற்றியை காண்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உண்டாகும். வீட்டில் உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை இருக்கும். தொழிலில் லாபம் அமோகமாக இருக்கும். உற்றார் உறவினர் வழியில் நல்ல செய்திகள் வரும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் இருக்கும். சுப காரியங்களில் தாமத நிலை இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் மனதிற்கு சந்தோஷம் பெருகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் உண்டாகும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

Categories

Tech |