Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! ஆதரவு கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! நல்ல தன லாபமும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். மனைவிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய் தந்தையாரின் உடல்நிலையில் கவனம் கொள்வீர்கள். பெண்களின் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனம் வேண்டும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வாகனயோகம் இருக்கு. பழைய வீட்டை புதுப்பிக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். மாணவக் கண்மணிகள் நல்லபடியாக படித்து படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் வெள்ளை. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7.

Categories

Tech |