Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (05-09-2020)நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

05-09-2020, ஆவணி 20, சனிக்கிழமை, திரிதியை திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.

 ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.21 வரை பின்பு அஸ்வினி.

 பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.21 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 சங்கடஹர சதுர்த்தி.

 விநாயகர் வழிபாடு நல்லது.

 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் – காலை 09.00-10.30,

  எம கண்டம் மதியம் 01.30-03.00,

 குளிகன் காலை 06.00-07.30,

 சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

நாளைய ராசிப்பலன் –  05.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உடம்பில் சிறுசிறு உபாதைகள் ஏற்படக்கூடும். வீண் செலவை சமாளிப்பதற்காக கடன்களை வாங்க கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க நேரும். தொழிலில் மேலதிகாரிகள் சிக்கலாக இருந்தாலும் உடன் இருப்பவர்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். சுப முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கையால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடவுள் வழிபாட்டில் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு சுபநிகழ்ச்சி செலவுகள் கூடும். புத்திர வழியில் அனுகூலம் பெருகும். வீன்  சண்டைகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் லாபம் கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கடன் சுமை குறையும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரநலை மந்தமாக தான் இருக்கும். பெரியவர்களுடன் மனக்கசப்பு நிகழும்.வீட்டில் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்தாள் ஒற்றுமை கூடும். தொழிலில் மேலதிகாரிகளிடம் பொறுமையாக நடப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளை  விலகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். எந்த செயல் செய்தாலும் இடையூறு வரக்கூடும். உங்களின் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்துடன் செயல்படவேண்டும். தொழிலில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

கன்னி

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் வீட்டிலுள்ள தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சி கைகூடும். தொழிலில் வேலைச்சுமை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு. பெரியவர்களின் நட்பு உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களால் நல்ல செய்திகள் வரும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாக கூடும். தடைப்பட்ட செயல்கள் அனைத்தும் கைகூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சனைகள் பெருகும். உறவினர்களால் வீட்டில் தேவையற்ற குழப்பம் உருவாகும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். குழந்தைகள் ஆதரவுடன் இருப்பார். சிக்கனமாக இருப்பதனால் பிரச்சனைகள் குறைய வாய்ப்பு.

தனுசு

உங்களின் ராசிக்கு உடல் நலத்திற்காக சிறிது செலவு செய்யக் கூடும். உத்தியோக ரீதியில் பொருளாதார நெருக்கடி கூடும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நாள் பிரச்சினைகள் அகலும். பெரியவர்களின் நட்பு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். உடன் இருப்பவர் களிடம் அனுசரித்து செல்லுங்கள்.

மகரம்

உங்களின் ராசிக்கு தொழிலில் கொடுக்கல்-வாங்கல் மன நிம்மதியை கொடுக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு. வீட்டில் இருந்த பிரச்சினைகள் அகலும். உறவினர்களின் உதவியில் கடன் குறைய வாய்ப்பு.

கும்பம்

உங்களின் ராசிக்கு வரவை விட செலவு அதிகமாகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து ஒற்றுமை நீங்கும். தொழிலில் எதிர்பார்க்காமல் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். நண்பர்களின் ஆதரவால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் இருப்பவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. உத்யோகத்தில் புதிய நண்பர்கள் உண்டாகக் கூடும். நண்பர்களின் சந்திப்பு மனதில் உற்சாகத்தை கொடுக்கும்.

Categories

Tech |