Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும்.

புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும்.

பெரிய முதலீடுகளை செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்க்க வேண்டும். கூட்டாளிகளிடையே விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். பணம் விஷயமாக எந்தவொரு பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். கோபப்படாமல் எதையும் பேசித்தீர்க்க வேண்டும். மாணவர்கள் பாடத்தைப் படிப்பதில் கடினமான சூழ்நிலை உண்டாகும்.

ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்துக் கவனியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |