துலாம் ராசி அன்பர்களே…! எவருக்கும் தேவையற்ற வாக்குவாதங்களை கொடுக்க வேண்டாம்.
தொழில் வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். முக்கிய செலவுக்காக சேமிப்பு பணம் கரையும். தொழிலாளர்கள் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும். வெளிநாடு போகும் சூழ்நிலை ஏற்படும். அனுகூலமான பலனை அடைய முடியும். சில உபத்திரம் ஆன விஷயங்களும் நடக்கும். எதிலும் எச்சரிக்கை அவசியம். ஆலய வழிபாடு உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் பொழுது கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பிரச்சனை ஓரளவு சரியாகும். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். கடன் பிரச்சனை சிறிது தலைதூக்கும்.
காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் பாடங்களை கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்கையை நல்லபடியாக முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் மஞ்சள் நிறம்.