கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களிடம் கவனம் அதிகமாக காணப்படும்.
இதை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கொள்கையோடு செயல்படுவது உதவிகரமாக இருக்கும். பணியிடத்தில் மாற்றங்களுக்கான சாத்தியம் உள்ளது. இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். இதனால் பணியில் மும்முரமாக இருப்பீர்கள். உங்களின் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும். உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். கருத்து வேறுபாடு காரணமாக பெரியவர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். தான, தர்மங்கள் செய்வதற்கு இன்றைய நாளில் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக பணிகளால் தலைவலியும் உடல் சோர்வும் உண்டாகும். தியானம் மற்றும் யோகா மேற்கொள்வதன் மூலம் நீங்கள் நல்ல பலனடையலாம்.