துலாம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும்.
எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள்.உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். வாக்கு வன்மையால் லாபம் இருக்கும். வீன் பயணம் அலைச்சல் உண்டாகும். இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கெட்ட கனவுகள் அவ்வப்போது தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். உஷ்ணம் ஏற்படுத்தும் பொருட்களை தயவு செய்து உண்ண வேண்டாம். கடன் தொல்லை ஏதும் இல்லை. கொடுத்த பணமும் திரும்ப வரக்கூடும். தெய்வீக எண்ணங்கள் மேலோங்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் பிரச்சனை இல்லை.மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் பிரச்சனை இருக்காது.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 1 மற்றும் 3. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.