Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நம்பிக்கை தோன்றும்…! பாக்கிகள் வசூலாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும்.

சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை வேண்டும். நிதி மேலாண்மையில் கவனம் கொள்ள வேண்டும். வீட்டில் பழுது பார்க்கும் வேலை இருக்கும். சகோதர வழியில் சின்ன சின்ன பிரச்சனை அவ்வப்போது வந்து சேரும். பஞ்சாயத்தில் கலந்து கொள்ளும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்திற்காக பணம் கடன் வாங்க இருக்கும். பெரிய தொகை இப்போதைக்கு வாங்க வேண்டாம். உங்கள் கீழ் வேலை செய்பவர்கள் உங்களிடம் கடுமை காட்டுவார்கள். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பழைய பாக்கி வசூல் செய்யும் பொழுது கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு சிரமம் தரும் நாளாக இருக்கும்.

மாணவக் கண்மணிகள் சிரமம் எடுத்து பாடங்களை படிக்க வேண்டும். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரக்கூடும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெளிர் நீலம் நிறம்.

Categories

Tech |