தனுசு ராசி அன்பர்களே…! சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும் படியாக இருக்கும்.
சொந்தங்களின் வருகை இருக்கும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக பக்தி கூடும். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். வீன் மனஸ்தாபம் அவ்வப்போது ஏற்படக்கூடும். சிலர் புரிந்து கொள்ளாமல் உங்களை பேசக்கூடும். வழக்கத்தை விட செலவு தான் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மிகக் கவனமான பேச்சை அணுகவும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். புதிய ஆர்டர் கிடைக்க அலைய வேண்டியிருக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்று கொடுப்பீர்கள்.ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் சிரமம் இல்லாத சூழல் அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது நல்லதைக் கொடுக்கும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.