மீனம் ராசி அன்பர்களே…! அறிமுகம் இல்லாதவர்களிடம் சொந்த பிரச்சனை பேச வேண்டாம்.
கூடுதல் முயற்சியால் தொழிலில் இருந்த மந்த நிலை சரியாகும். அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். உடல்நலம் சீராக இருக்கும் பிரச்சனை இல்லை. முயற்சி அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். சம்பந்தம் இல்லாத வேளையில் மூக்கை நுழைக்க வேண்டாம். பணவரவு தாராளமாக இருக்கும். பதவி உயர்வு தகவல் வரக்கூடும். கடல் தாண்டி வரும் செய்தி மனதை மகிழ்விக்கும். விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். கேலி கிண்டலை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் சிறப்பு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். கணவன் மனைவி இடையே சுமூகமான நிலை இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.