Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(03-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

03-12-2020, கார்த்திகை 18, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 07.27 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.

திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு புனர்பூசம்.

மரணயோகம் பகல் 12.21 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

சங்கடஹர சதுர்த்தி.

விநாயகர் வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் –  03.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு கடினமான காரியத்தை கூட எளிதில் முடிக்கும் துணிவு அதிகரிக்கும். சுப செய்தி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோக ரீதியில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு பணப்புழக்கம் குறைந்தே இருக்கும்.உத்தியோகத்தில் எதிர்பார்க்காத சிக்கல்கள் வரும். சிக்கனமாக இருந்தால் பணப்பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சிறுசிறு மாற்றங்களால் லாபம் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவி அமையும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உடல்நிலை சீராக இருக்கும். கடன் தொல்லை தீரும்.

கடகம்

உங்கள் இராசிக்கு பண வரவு அமோகமாக இருந்தாலும் செலவும் அதிகரிக்கும். உற்றார் உறவினர் வீட்டிற்கு வருவதால் மகிழ்ச்சி இருந்தாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுவது பிரச்சனையை தீர்க்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த காரியம் இன்று நிறைவேறும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பணவரவு திருப்திகரமாக அமையும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். உடல்நிலையில் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சீராக அமையும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டில் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை சீராக அமையும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக் கூடும். தொழிலில் நல்ல வாய்ப்பு உண்டாகும். அரசு ரீதியில் எதிர்பார்த்த கடன் தொகை எளிதில் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

துலாம்

உங்கள் இராசிக்கு நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மருத்துவ செலவுகள் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும் வீட்டில் ஆதரவு வேண்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் இருக்கும்.சுப காரியங்களையும், தொழில் ரீதியாக புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளியிடங்களில் அமைதியை காக்க வேண்டும் பிரச்சனைகள் அகலும். எந்த விஷயத்திலும் நிதானம் வேண்டும்.

தனுசு

உங்கள் இராசிக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமாகவே கிடைக்கும். சுப காரியங்கள் உண்டாகும். மகிழ்ச்சி பெருகும்.உத்தியோகத்தில் அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு அமையும்.

மகரம்

உங்கள் இராசிக்கு வீட்டில் தாராள தன வரவு இருக்கும். சுப காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மகிழ்ச்சி அடைவீர். தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் திருப்தி நிலையை இருக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சோர்வு மந்தநிலை இருக்கும். சுபகாரியங்களில் இடையூறு உண்டாகும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.பூர்வீக சொத்துக்கள் மூலம் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் உண்டாகும்.

மீனம்

உங்கள் இராசிக்கு திடீர் செலவுகள் இருக்கும். குழந்தைகளுடன் மனஸ்தாபம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினை அகலும்.அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவீர். உடலில் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும்.

Categories

Tech |