கடகம் ராசி அன்பர்களே…! தன வரவு தாராளமாக இருக்கும்.
பிரச்சினை இல்லாத நாள் என்று சொல்லலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் நடக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும். மனதில் இறுக்கமான சூழ்நிலை மாறி உற்சாகம் பிறக்கும். குழந்தைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். எந்த ஒரு காரியமும் அனுகூலமாக நடக்கும். மனதில் இருந்த மனக்கவலை நீங்கும் நிம்மதி பிறக்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவு இருக்கும். தனம் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். மேல் அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். எந்த பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு சரியாகும்.
காதலில் சந்தோஷமான தருணம் அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிகாட்டும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தில் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.