மகரம் ராசி அன்பர்களே…! போக்குவரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்லுங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். கடுமையான உழைப்பு இருக்கும். வருமானம் கொஞ்சம் சிக்கல்தான் இருக்கும். மற்றவர்களிடம் தேவையில்லாத பகை உண்டாகும். பேச்சில் நிதானம் வேண்டும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் கைகொடுப்பார்கள். மனதில் இருந்த இறுக்கமான சூழல் இருக்கத்தான் செய்யும். மகரம் ராசி நேயர்களுக்கு இந்த சுமாராக தான் இருக்கும். குலதெய்வத்தை நன்றாக வணங்கி வழிபட்டு வாருங்கள். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்லது நடக்கும்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் இருந்தாலும் மந்த நிலையே உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கும் இக்கட்டான சூழ்நிலை இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.