கும்பம் ராசி அன்பர்களே…! நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
அஜீரண கோளாறு உடலுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தும். சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். கோபங்களை ஏற்படுத்த வேண்டாம். மற்றவர்கள் பகை ஏற்படும்படி நடந்து கொள்வார்கள். உயரதிகாரிகளிடம் கவனமாக பேச வேண்டும். பணிவாக நடத்தல் என்பது கண்டிப்பாக அவசியம். இறை வழிபாடும் வேண்டும். பணவரவு ஓரளவு இருக்கும். புதிய நபரின் அறிமுகம் லாபத்தை ஈட்டிக் கொடுக்கும். நீண்ட நாட்களாக சின்ன சின்ன பிரச்சனை சந்தித்து அவர்களுக்கு விடிவுகாலம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சனை சரியாகி காரியங்களில் நல்ல பலன் இருக்கும். சகோதரர்களின் ஒற்றுமை இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும்.
சுப காரியங்களில் தடைகள் உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கு வாக்குவாதங்களை தவிர்த்து நல்ல படியாக பேசுவது நல்லது கொடுக்கும். மாணவ கண்மணிகளுக்கு படிப்பில் கவனம் செல்வது சிரமமாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.